குழந்தைத் தொழிலாளர் முறை உலகின் பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களிலும் தொடர்கதை ஆகிஉள்ளது. யுனிசெப் அறிக்கையின்படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வேலைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைத் திருத்தச் சட்டம் - 2016 ஜனவரி 1, 2016 இயற்றப்பட்டது. அதன்படி 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) 1986, சிறார்களை எந்தவிதமான தொழிலிலும் உற்பத்தி நடைமுறைகளிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு 2016-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தை தொழிலாளர்கள் பண்ணை தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் வாத்து பண்ணையில் இரண்டு சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக 1098 என்கிற சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும் சைல்ட் ஹெல்ப்லைன் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பிரகலாதன் மேற்பார்வையாளர் சுரேஷ் மன்னார்குடி உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிறுவர்களை மீட்டனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்..10 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. கம்பி எண்ணும் ஒருதலைக் காதலன்..!

இந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான இந்த வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக விஜயகுமாரிடம் திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டார வடை பரமனா தெருவைச் சேர்ந்த மணி என்பவர் தனது மகன்களான தினேஷ் வயது 13 சந்தோஷ் வயது 9 என்கிற இரு சிறுவர்களையும் 80000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக விற்பனை செய்ததது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விஜயகுமார் மீது கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.மேலும் சிறுவர்களை பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலைக்காக அனுப்பி வைத்த தந்தையிடம் உரிய விசாரணை நடத்தி அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடை மற்றும் உணவு அளிக்கப்பட்டு திருவாரூர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க தங்க வைத்துள்ளதாகவும் பெற்றோரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை.. திருந்தி வாழ நினைத்தவரை தீர்த்துக்கட்டிய கும்பல்.. யார் இந்த வசூல் ராஜா..?