திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கொட்டப்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவர் சொந்தமாக ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்த ஒர்க் ஷாப்பில் பழைய கார் ஜீப் சரக்கு வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பழுது பார்ப்பதற்காக உரிமையாளர்கள் விட்டுச் சென்று இருந்தனர். அப்போது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒர்க்ஷாப்பில் யாரும் அல்லாத நிலையில் வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின.

அப்போது அக்கம் பக்கத்தினர் அழித்த புகாரின் தகவலின் படி சம்பவ இடத்திற்கு வரை இந்த தீனைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென எரிந்ததால், ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஜிப் உள்பட 22 வாகனங்கள் தீக்கு இறையாகி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து.. ரயில்களுக்கு சிக்னல் அனுப்புவதில் சிரமம்..!

தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பில் ஆன வாகனங்கள் எரிந்து சேதமாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ.. 9 மாத குழந்தை பலி..!