செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் அவரது நண்பர்களான பாண்டியன், தங்கமணி, குமார் ஆகியவருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது வழக்கம் போல செந்தில் கடலுக்குள் வலையை வீசவே, உடனடியாக ராட்சச வடிவில் ஏதோ வலையில் சிக்கி உள்ளது.

இதனை அடுத்து மீனவர் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் அந்த ராட்சஷ உருவத்தை கரைக்கு இழுத்துச் சென்றுள்ளனர். ஆவலோடு அந்த ராட்சத உருவம் என்னதென்று பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் வியந்து நின்றனர். மீனுக்காக வீசிய வலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராட்சத திருக்கை மீன் ஒன்று சிக்கி இருந்தது தெரிய வந்தது. சுமார் 1500 கிலோ எடை கொண்டு இருந்த அந்த திருக்கை மீனை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து.. ரயில்களுக்கு சிக்னல் அனுப்புவதில் சிரமம்..!

இது குறித்து மீனவர் செந்தில் கூறுகையில், திருக்கை மீன் வேகமாக நீந்தக் கூடிய மீன் வகைகளில் ஒன்றானது. அரிதாக வளையில் சிக்கும் இந்த வகை மீன் பல்லாயிரம் ரூபாய் வரை விற்பனையாக கூடியது என்று தெரிவித்தார். முன்னதாக இந்த ராட்சத திருக்கை மீன் சந்தையில் வைக்கப்பட்டபோது சுமார் 20, ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாபெரும் வெற்றி... ஜம்மு-வில் 4 நாட்களில் 30 கி.மீ சுற்றி வளைப்பு: 2 பயங்கரவாதிகள் பலி..!