காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்கு பகுதி கழகம் 37 ஆவது வட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைக்கச் செல்வன், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் குறித்து பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவு படுத்தி உள்ளார்.
அந்தக் கருத்து தான் கட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்து. 100 நாள் வேலை 150 நாளாக மாற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது ஆனால் இதுவரை வழங்கவில்லை. நான்கு வருடம் ஆகிவிட்டது இன்னும் பத்து மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது , நாடு முழுவதும் அதற்கு உரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது,மேலும் 100 நாள் வேலைக்கு ஐந்து மாதம் ஆறு மாதம் என சம்பளம் வரவில்லை ஆகவே இந்த நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது.
இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை எதிர்த்து மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள் 100 நாள் வேலை செய்த எங்களுக்கே சம்பளம் இல்லை என்கின்ற கண்ணீரும் கவலையும் தெறிக்க சொல்லி வருகிறார்கள். ஆகவே இதை திசை மாற்றுவதற்கு மடை மாற்றுவதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று போராட்ட அறிவிப்பை ஒரு நாடகத்தை திமுக இன்று அரங்கேற்று இருக்கிறது. இந்த நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.
100 நாள் வேலை திட்டத்திற்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று எங்கு போராட வேண்டும் திமுக
நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களை கூட்டணி கட்சியோடு பெற்றிருக்கிற அவர்கள் அங்கு கோரிக்கை விட வேண்டும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்க வேண்டும். அதை விடுத்து மக்களை சந்தித்து திசை திருப்புகிற முயற்சியாக தான் நாங்கள் இதை பார்க்கிறோம்,

தோற்பதில் காம்படிஷனா என்று தெரியவில்லை திமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் எனக்கும் அவருக்கும் தான் போட்டி என்று கூறினால் தோற்பதில் போட்டியாக இருக்கலாம். வெற்றி பெறுவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என பார்க்கத்தான் போகிறீர்கள். ஏழு முறை ஆட்சியில் இருந்த அண்ணா திமுக எட்டாவது முறையாக எட்டாத உயரத்தில் நிச்சயமாக 2026 இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை பிடிக்கும்.
கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தினிப்பு. எந்தக் கருத்து கணிப்பும் இதுவரை உண்மையாகி இருக்கிறது.
இன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று எல்லா பணிகளையும் பூத் கமிட்டி அமைப்பது முதல் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இரண்டு கோடி உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம் ஆக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்கனவே முதலமைச்சராக நான்கு வருட காலம் பணியாற்றி விட்ட எடப்பாடியாருக்கு தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் நிரூபித்து காட்டுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மியான்மருக்கான ‘ஆப்ரேஷன் பிரம்மா’ என்றால் என்ன..? இந்தியா ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது..?