தமிழக வெற்றி கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பாளரான எஸ் டி ஆர் சாமுவேல் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று இருபதாவது நாளாக மதிய உணவும் இரண்டாவது முறையாக இலவச கண் சிகிச்சை முகாமும் துவக்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்.. தவெக சார்பில் இலவச நீர், மோர் பந்தல்..!

மேலும் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தொடர் சிகிச்சைக்கான தேவை என்றால் அதற்கான வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இருபதாவது நாளாக நடைபெற்று வரும் இலவச மதிய உணவு முகாமில் துப்புறவு பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.
இதையும் படிங்க: களத்தில் தொண்டர்கள்... திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு..!