சமூக வலைதளங்களில் #GetOutStalin ஹேஷ்டேக் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்போது வரை 13 லட்சம் பேர் இந்த ஹேஷ்டாக்கை பயன்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பெரும் சாதனையாகக் கருதி பாஜகவினர் ஆங்காங்கே கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
நேற்று 'கெட் அவுட் மோடி' என்கிற ஹேஷ்டாக்கை பகிர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவினர் ட்ரெண்டாக்கினர். இதனால் வெறுப்பான அண்ணாமலை, ''நீங்கள் போட்ட ட்வீட்டை மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்திருந்தார் அண்ணாமலை.

அவர் சொன்னது போலவே, சரியாக இன்று காலை 6 மணிக்கு #GetOutStalin என்கிற ஹேஷ்டாக்கை தொடங்கி வைத்தார். பயங்கரமாக ட்ரெண்டாகி அரசியல்ளத்தையே அதிர வைத்து வருகிறது. சரியாக பத்தே மணி நேரத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி திமுகவை திணறடித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் #GetOutStalin ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. #பால்டாயில்_பாபு என்கிற ஹேஸ்டேக்கும் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்
இதையும் படிங்க: #GetOutStalin 10 லட்சம் ஹேஷ்டாக்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஹெச்.ராஜா..!
.
#GetOutModi என திமுகவினர் பகிர்ந்த ஹேஷ்டேக்கை நேற்று முதல் இன்று வரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்போது வரை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று காலை ஆரம்பித்த #GetOutStalin அதையும் தாண்டி வெறும் 10 மணி நேரத்திற்குள்ளேயே அதனை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 2 மணி நேரத்திற்குள்ளேயே முறியடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் பாஜகவினர். இதனை சற்றும் எதிர்பாராத திமுகவினர், தப்பு பண்ணிட்டோமே சிங்காரம் எனப் புலம்பி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளப்போட்டி, திமுக மற்றும் பாஜக இடையேயான அரசியல் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், திமுகவின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் சவால், சமூக வலைதளங்களில் நடைபெறும் இந்த டிரெண்டிங் போராட்டம், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது தேர்தல் களத்தில் வெளிப்படுமா? வரும் சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!