புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் 58 வயதான பெருமாள் என்பவர் பணியாற்றி வந்தார். இவரே அப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.

இந்நிலையில் அவர் அதேபள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அந்த மாணவியே புதுக்கோட்டை மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் எண்ணுக்கு போன் செய்துள்ளனர். ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வருவதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!

இதனை புகாராகப் பெற்றுக்கொண்ட அவர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதோடு, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்திய நிலையில் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிந்தது. மாணவிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பெருமாளை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெருமாளை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் நான்சென்ஸ்... சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. 11ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது.!