ஆங்கிலம் வெளிநாட்டு மொழி அது ஒருபோதும் நமது பொது தேசிய மொழியாக ஆகாது. எனவே இந்தியை படிப்படியாக பொது தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் வலியுறுத்தி இருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற 'ஏ பி பி நெட்வொர்க்'கின் 'ஐடியாஸ் ஆப் இந்தியா' இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண்குமார் இந்த தகவலை வெளியிட்டு பேசுகையில், சுயநல நோக்கங்களுக்காக இந்தி மொழியை விமர்சிப்பதை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டில் முன்மொழி கொள்கை விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், இந்தக் கருத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அருண் குமார் கூறுகையில்,’ தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிஷ்டவசமானது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..!
ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும் இந்தியாவில் பிராந்திய மொழி என்று எதுவும் கிடையாது.
அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான்.. ஒவ்வொரு மாநிலமும் தனது மொழியை வளர்த்து, குறிப்பிட்ட மொழியில் தனது நிர்வாகத்தை நடத்த வேண்டும்.
ஆனால் நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது, எங்களுக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை, ஒரு கட்டத்தில் அது சமஸ்கிருதமாக இருந்தது.

ஆனால் அது இன்று சாத்தியமில்லை, இப்போது அது என்னவாக இருக்கும், அது இன்று இந்தியாக இருக்கும். உங்களுக்கு இந்தி வேண்டாம் என்றால் உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும்.
ஆர் எஸ் எஸ் நிறுவனர் எம் எஸ் கோல்வால்கரின் கருத்துப்படி, ஆங்கிலம் என்றால் அது பொதுவான தேசிய மொழியாக இருக்க முடியாது. அது பொதுவான வெளிநாட்டு மொழியாக இருக்கும்.
ஆங்கிலம் பொதுவான தேசிய மொழி ஆக்கப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு பாதிக்கப்படும். எனவே இந்தியை படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும்.
"தமிழகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை" என்கிறார்
படிப்படியாக மாற்றும் இந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அதை செயல்படுத்தினால், அதற்கு எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இந்தி மொழியை எதிர்க்கும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இந்தி மொழியில் சான்றிதழ் படிப்புகளை படித்து வருகிறார்கள் எனவே அந்த விஷயத்தில் நாம் கவலைப்பட தேவையில்லை" என்றார்.

உலகில் சிறுபான்மையினர் ஆபத்தில் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் நடந்ததை அடுத்து நிறைய இடப்பெயர்ச்சி ஏற்பட்டது. 1947 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 32% இன்று அந்த எண்ணிக்கை வெறும் 8% ஆக குறைந்துவிட்டது.
இதற்கு நேர் மாறாக 1947-ம் ஆண்டில் இந்தியாவில் 8.9 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் இன்று 14 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளனர். அப்படி என்றால் இந்தியாவுடன் எப்படி அதை ஒப்பிட முடியும்? பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது அங்கு சிறுபான்மையினர் எண்ணிக்கை என்னவாக இருந்தது?
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு என்ன நடந்ததோ அது இந்தியாவில் நடைபெறாது. ஏனென்றால் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான ஒவ்வொரு வழியும் சரியானது என இந்தியா நம்புகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் இந்தியாவில் பரந்த மனப்பான்மை அதன் பலவீனமாக கருதுகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவே... ஆர்டிகல் 356 தான்..! ஹிந்தி படிக்கிறத தடுத்தா அவ்வளவுதான்..! மிரட்டும் சு.சுவாமி..!