நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் அளித்திருந்த நிலையில், அந்த குற்றச்சட்டுகளை அடியோடு மறுத்துள்ளனர் மாப்பிள்ளை வீட்டார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியன்று, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக கவிதா சிங்கின் மகள், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல்ராம் சிங், அவரது தந்தை யுவராஜ் சிங் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "நாங்கள் எப்போதும் அவர்களுடன் சுமூகமாக போக வேண்டும் என்றுதான் நினைத்தோம். இருட்டுக்கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில்தான் அந்த கடை இருந்தது. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!

அந்த சுலோச்சனா பாய் இவர்களுக்கு கடையை எழுதிக் கொடுத்ததாக கூறுகின்றனர். ஹரிசிங் என்பவர்தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில்தான் இறந்தார். கடையே அவர்களுக்கு இப்பொழுதுதான் வந்து இருக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள். அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும்கூட அவர்களின் வீட்டிலேயேதான் இருக்கிறது.

இருட்டுக்கடையை ஏமாற்றி அவர்களின் கைகளுக்கு கொண்டு சென்றது வெளியே தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரமில்லை. அப்பெண்ணுக்கு வேறு ஆண் நபர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதை கேட்டதற்கு இப்படி குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். அந்தப் பெண்ணுக்கு முதலில் மூன்று இடங்களில் திருமணம் நிச்சயமாகி நின்று போய் விட்டது. இதுவும் திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது. அவர்கள் மீது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரும் உள்ளது. நாங்கள் 4 தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம். எங்களுக்கு வரதட்சணை பெற்றுத் தான் வாழ வேண்டிய அவசியமில்லை.

இருட்டுக்கடை வைத்திருக்கும் கவிதா சிங் குடும்பத்தினருக்குத் தான் 5 கோடி ரூபாய் கடன் உள்ளது. அவர்கள் மீது உள்ள குறைகளை மறைக்கவே எங்கள் குடும்பம் மீது அபாண்டமாக பலி போடுகிறார்கள்.
எங்களை ஏமாற்றி இந்த திருமணத்தை செய்து விட்டனர் இருந்தபோதிலும் மெக்கானிக் பெண்ணாக கனிஷ்கா திரும்பி வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதே சமயம் தங்கள் மீது அவதூறு பரப்பியதால் கனிஷகா மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் எனவும் தெரிவித்தனர். கனிஷ்கா தெரிவிக்கும் புகார் நடந்த நாட்களில் நான் மற்றும் எனது மனைவி கோவையில் இல்லாத போது தங்கள் மீது வீண்பழி சுமத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார் . மேலும் கனிஷ்காவின் தாய் கவிதா மனநிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அனைத்துக்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது . அந்த பெண் சூட்கேஷில் நகைகளுடன் வந்தார் அதை எடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் டிபெண்டர் கார் 1.5 கோடி மதிப்பு அதனை தனது திருமணத்துக்கு முன்னரே புக் செய்து விட்டேன் என பல்ராம் சிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் பஸ் கடத்தல்.. முன்னாள் டிரைவர்கள் அட்டூழியம்.. நெல்லையில் பரபரப்பு..!