அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்மாவின் தொண்டர்கள் ஒன்றினைய வேண்டும். அதிமுக-அமமுக தொண்டர்களின் விருப்பம் அது தான் அதற்கு சில சுய நலவாதிகள் தடையாக உள்ளனர் எனக்கூறினார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சீமான் ஏமாற்றி வந்துள்ளார். . மாபெரும் விடுதலை போராட்ட தலைமையை சந்தித்து குறித்து அதுதொடர்பான புகைப்படம் மற்றும் பேச்சுக்கள் குறித்து சீமானை விமர்சித்த டிடிவி தினகரன் மறைந்த தலைவர்கள் குறித்து கண்ணியமாக பேச வேண்டும். பெரியார் என்ற மாபெரும் தலைவர் குறித்த அவதூறு பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். டிராமாவில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வேசமிட்டவர் போல பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் விமர்சித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!

கடந்த சில நாட்களாகவே பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் வரவேற்போம் என்பது போல் டிடிவி தினகரன் பேசி வந்தார். ஆனால் டிடிவி தினகரனுக்கு அமமுகவை நடத்துவதில்லை விருப்பம் இல்லை என்றும், கட்சியை அதிமுகவுடன் இணைந்துவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரண்டாவது முறையாக அதிமுக - அமமுக ஒன்றாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே பேசியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கொடுத்த கிரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2026ல் அதிமுகவுக்கு மூடு விழா...! தமிழகத்தில் மதக்கலவரம்...! திகில் கிளப்பும் டிடிவி தினகரன்!