கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 14, 15 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. என்ன திருவிழாவில் தமிழக மீனவர்கள் மட்டுமின்றி இலங்கை மீனவர்களும் ஒரு சேர இணைந்து வழிபட்டனர். முன்னதாக இந்த திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 100 படகுகளில் 3000 மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் மற்றும் மக்களை சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

அதன்படி கடந்த 13ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 3000 மேற்பட்ட பக்தர்களுடன் 100 விசை படகுகள் கச்சதீவு நோக்கி புறப்பட்டது. முன்னதாக கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் ஏதும் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதையும் படிங்க: தொடங்கிய கட்சத்தீவு திருவிழா.. படகில் படையெடுத்த தமிழக பக்தர்கள்!

தற்போது கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்துள்ள நிலையில், மீன் பிடிக்க செல்ல விரிக்கப்பட்டிருந்த தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்குவதாக உத்தரவிட்டது. தொடர்ந்து திருவிழாவிலிருந்து கரை திரும்பிய மக்கள், மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இதையும் படிங்க: மார்ச் 14 ஆம் தேதி கச்சத்தீவு திருவிழா.. ஏற்பாடு பணிகள் தீவிரம்!