இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் சமூக வலைத்தளப் பதிவில் கூறிருப்பதாவது:
இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு திரைத் துறையில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வளமாக இருக்கும் ரஜினிகாந்த் வெகு நாட்களுக்கு முன்பிருந்து அரசியலுக்கு வருகிறேன் என்றார்! வராமலும் போவேன் என்றார். வந்தாலும் வருவேன் என்று இன்னமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தனக்குப் பெரும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது என்ற் நிலையில், இவர் போன போக்கில் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்! சரிதான்! ஒரு அரசியல் நாகரிகமான செயல் தான்! ஏற்றுக் கொள்வோம்!.. ஆனால் இதே ரஜினிகாந்த் தான் 1996 இல் தமிழ்நாட்டை “ஆண்டவனாலும் இனி காப்பாற்ற முடியாது “என்று சொல்லி ஜெயலலிதா ஆட்சியைத் வாய்ஸ் கொடுத்து உழல் ஆட்சியை தோற்கவைத்தார்.

அது மட்டுமல்ல அதே காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் இணைந்து உருவாக்கிய மதிமுக மூலம் ஒரு மிகச்சிறந்த மாற்று அரசியலை முன்னெடுத்து அதற்கான கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திந்தபோது ஒரு 20 - 30 சீட்டுகள் கிடைத்திருக்கக்கூடிய சூழலில் அதையும் இவர் தான் வாய்ஸ் கொடுத்துக் கெடுத்தார். அனைத்தையும் நாசம் பண்ணினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா எனும் ஆளுமை... ஆணாதிக்க உலகில் ஒரு குறிஞ்சி மலர்..!!
திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து அவற்றுக்குப் பதிலாகத் தான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக தொடர்ந்து அறிவித்தார். பிறகு வர முடியாது சிஸ்டம் சரியில்லை என்றும் சொன்னார். இன்று ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்.

அதற்கு முன்பு கலைஞருக்கு அஞ்சலி செய்து விட்டு ஸ்டாலின் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டும் வருகிறார். அத்துடன் இல்லாமல் சோவின் துக்ளக் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்! இப்படியாகத் தமிழ்நாட்டு மக்களின் முன்பு வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பதற்காகவா இவர் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார்.
ஏதோ அரசியல் வரலாற்றுத் தத்துவங்களை எல்லாம் கற்று தேர்ந்தவர்போல இவர் தமிழ்நாட்டு அரசியலுக்குள் திரிவது ஒரு பெரிய வேடிக்கையாகதான் இருக்கிறது.
இப்படித்தான் இவரது அரசியல் அவ்வப்போது வந்து போயும் இருந்து கொண்டிருக்கிறது. அவருக்கு சினிமாவில் புகழ் இருக்கிறது என்பது வேறு! அந்த அளவோடு நிறுத்தி இருக்கலாம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...!