மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி-யும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் வந்தவர்கள் அசைவு உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் விதமாக நான்காம் தேதி திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு இந்த அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 4ஆம் தேதி அன்று திருப்பரங்குன்றத்திற்குள் வர இருந்த 16 வழித்தடங்களையும் அடைத்த காவல்துறையினர் விடுதிகள் மண்டபங்கள் ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதனை அடுத்து நீதிமன்றத்தை நாடிய இந்து அமைப்புகளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே போராட்டம் நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எடுத்து பிப்ரவரி நான்காம் தேதி மாலை மதுரை பழங்காநத்தம் சுமார் 2000 இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

இச்சம்பவங்கள் ஒட்டு தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், மதுரை முஸ்லிம் ஜக்கிய ஜமாத் பெயரில் தீயாய் பரவிய செய்தி பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கையிமதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரை பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி18 சமபந்தி கந்தூரி என்ற பெயரில் சமுக வலைதளங்களில் பரப்படும் செய்திக்கும் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை
இச்செயல் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நற்பெயருக்கு களங்கம் விழைவிக்கும் செயலாகும் மேலும் அவதூறு செய்தியை பரப்பும் வலைதளங்களில் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஒரே பொய்யா பேசுறாங்க”... அண்ணாமலையையும், எச்.ராஜாவையும் புடிச்சி ஜெயில்லா போடுங்க..! ஆவேசமான நவாஸ் கனி!