உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மேடையில் பேசிய ஒரு கருத்தை உடனே திருத்துவதாக கூறிப் பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், ''இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலை அரசாங்க சூழ்நிலை, அரசியல் சூழ்நிலை என்று சொல்வது கூட அது ஏதோ அரசியலுக்காக பேசுவதற்காக அர்த்தம். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்க சூழ்நிலை மாநிலத்தில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கையை ஒழித்துவிட்டு ஒரே கல்வி பாடத்திட்டத்தை சர்வாதிகாரப் போக்காக ஒன்றிய அரசு திணிக்க முற்படுகிறது.

இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் துடித்து எழுந்து எதிர்க்கிற ஆண்மையுல்ல ஒரே மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு இந்தியா உற்று நோக்குகிற ஒரு காலகட்டத்தில் நாம் இங்கு நம் துணை முதலமைச்சர் பெற்றிருக்கிறோம். இந்த நிகழ்வு குற்றவியல் சங்கத்தினுடைய சர்வதேச மாநாடு. 45 வது அகில இந்திய குற்றவியல் மாநாடு. சட்டப் படிப்பை படிக்கக்கூடிய மாணவச் செல்வங்கள், நீதி அரசர்கள், பேராசிரியர்கள் இடம் இருக்கிறீர்கள். இதே பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக சேர்ந்து பயின்ற நான் பி.எச்டி முனைவர் பட்டம் பயின்ற நான், 2011-ல் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நான், அன்பு தலைவர் டாக்டர் கலைஞர், அருமை தலைவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரை நினைத்துப் பார்க்கிறேன்.
இதையும் படிங்க: நேற்று அப்பா ஸ்டாலின்… இன்று மகன் உதயநிதி … கவிதை 'சுட்டும்' கலைஞரின் வாரிசுகள்..!

இங்கு துணை முதல்வரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். எந்த கல்லூரியில் வரிசையில் நின்று மாணவனாக பணம் கட்டினேனோ, தேர்வு கட்டணம் கட்டினேனோ, என்னுடைய தேர்வு நுழைவு சீட்டைப் பெற்றேனோ, அதே பல்கலைக்கழகத்தில் இன்றைக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக ஒரு எளியவனைக் கொண்டு வந்து நிறுத்திய பெருமை திராவிட மாடல் ஆட்சியின் அற்புத சாதனை. அதை செய்து காட்டிய தலைவர் நீங்கள்'' என்று பேசினார்.
உடனே பேச வந்த உதயநிதி ஸ்டாலின், ''இங்கே உயர் கல்வித்துறை அமைச்சர் அண்ணன் உரையாற்றும் பொழுது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு, மாநில உரிமைக்கு என்ன தீங்கு வந்தாலும் ஒரு இடர்பாடு வந்தாலும், முதலில் குரல் கொடுக்கின்ற ஒரு மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். அப்படி அவர் குறிப்பிடும் போது ஒரு வார்த்தை சொன்னார். ஒரு ஆண்மை உள்ள மாநிலம் என்று இங்கே குறிப்பிட்டு இருந்தார். அதில் எனக்கு ஒரு சின்ன திருத்தம்.

இங்கே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள். எனவே ஆண்மை என்றால் அது ஒரு தனிமையான வீரம் என்றெல்லாம் கிடையாது. அவர் குறிப்பிடும்போது இன்னொரு வார்த்தையும் சொன்னார். இந்தியாவிலேயே மூன்றாவது அதிகமான பெண் போலீசாரை கொண்டுள்ளது தமிழ்நாடு தான் என்று குறிப்பிட்டார். அவரிடத்திலும் தெரிவித்துக் கொள்வது, உங்களிடமும் தெரிவித்துக் கொள்வது இங்கு ஆணுக்கு பெண் சமம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!