பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி வித்தியாசம் பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி கோபமாக பேசியுள்ளார்.
சாதி பகுபாடு குறித்த கேள்வி:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் குறித்து இன்று அதிகாலை வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு செய்தியாளர், “பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி ரீதியாக பறையர் சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியைக் கேட்டதும் டென்ஷனான அமைச்சர் மூர்த்தி, “தவறான கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. எங்களுக்கு எல்லாரும் சமம். அனைவரையும் ஒருங்கிணைத்து தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுகிறது. கேள்வியை பார்த்து கேளுங்கள். எந்த டி.வி. நீங்க என பதில் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி வித்தியாசம் பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி கோபமாக பேசியுள்ளார்.
எதனடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்றதற்கு, “பாலமேட்டில் குறிப்பிட்ட சாதியினர் வாசலில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என செய்தியாளர் விளக்கமளித்தார். இதைக்கேட்டதும் முகமே மாறிப்போன அமைச்சர் மூர்த்தி, “அதைப் போல் எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை. எல்லாரையும் ஒரே மாதிரி தான் நடத்திட்டு இருக்கோம்” எனத் தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களின் அடுத்த கேள்விக்கு கூட சரியாக பதிலைச் சொல்லாமல் காரில் ஏறி புறப்பட்டார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன?
இந்த வருடம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 
அன்றைய தினம் பாலமேடு கிராமமே திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்திருந்தனரர். இது ஒருபுறமிருக்க தமிழரசன் என்கிற இளைஞர், மாடிபிடிக்க டோக்கன் வாங்கி வைத்து இருந்தும் தனக்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். என்னை கடுமையாகத் தாக்கினர். ஜாதிபாகுபாடு பார்க்கிறார்கள் என மீடியாக்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் - காரணம் என்ன?