எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம் கேட்பதாக தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலமே இருக்கும் நிலையில தென் மாவட்டங்களில் எம்எல்ஏ சீட்டுக்காக தலைமைக்கும், நிர்வாகிகளுக்குமான இடைத்தரகறாக செயல்பட கட்சிக்கு புதுசா வந்த ஒருத்தர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ரசிகர் மன்றத்திலிருந்து வந்து இப்போது மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவரும், மூத்த நிர்வாகிகள் இந்த குறிப்பிட்ட இடைத்தரகர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்ட செயலாளர்களுடன் தேர்தலுக்கு முன்பே இடைத்தரகர்கள் போல செயல்படுவதால் அவர்கள் மீது நிர்வாகிகள் விஜய்க்கு கடிதம் அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.

புகார் கூறப்படும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி குறித்து அம்மாவட்ட நிர்வாகிகள் போஸ்டர் அடித்து ஒட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், ''வஞ்ச புகழ்ச்சியா? லஞ்ச புகழ்ச்சியா? எங்கே? எங்களின் உழைப்பு? பணத்திற்கு விலை போகாத கூட்டத்தை அறிவாயா? வன்மையாக கண்டிக்கின்றோம்.
தொடர்ந்து தளபதியின் உண்மை தொண்டர்களை பதவிகளில் அமர விடாமல் உறவிவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும் மட்டும் பதவி கொடுத்து அழகு பார்த்து வரும் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். மக்கள் இயக்கமாக இருந்த காலத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழக கட்சியாக மாறியபிறகும் உங்களது சுய லாபத்திற்காக தளபதியை சந்திக்கும் நிகழ்வுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்த்து கொண்டிருக்கும் மாவட்டமே...
இதையும் படிங்க: இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நான்தான் பாதுகாப்பு.. எனக்கு எதுக்கு பாதுகாப்பு என்று சீமான் கேள்வி!!

தளபதிக்காக உழைக்க வந்த எங்களிடம் பணம் பெற்று கொண்டு உனது உல்லாச வாழ்க்கைக்காக எங்களை பகடைகாயாக பயன்படுத்தாதே. கட்சியை வளர்க்காமல் உங்களை மட்டுமே வளர்த்துக் கொண்டு செயல்படும் உங்கள் செயல்பாட்டை கண்டு வன்மையாகக் கண்டிக்கின்றோம். விலை போகாதே போகாதே. பணத்திற்கு துணை போகாதே. துணை போகாதே. தளபதி அரசியல் வாழ்க்கையை அடக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு துணை போகாதே. பதவி விலகு சுயநலவாதியே பதவி விலகு. இது பிறப்பொக்கும் எல்லா உயிருக்குமான கட்சி. உனது சமூகத்திற்கு மட்டும் சார்ந்த கட்சியல்ல.'' என தெரிவித்துள்ளனர்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. 3 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்பதாகத் தெரிவித்தனர். மாற்று கட்சியில் இருந்து ஒரு வாரம் முன்பு வந்த முபாரக் என்பவருக்கு நகர செயலாளர் பதவி வழங்கியதாகவும் புகார் கூறியுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்குத் தெரிந்தே பணம் வசூல் நடைபெறுவதாகக் கூறிய அவர்கள், தலைவர் விஜய்க்குத் தெரிவிக்கவிடாமல் புஸ்ஸி ஆனந்த் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

ரூ.4 லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால், தனக்கு பதவி கொடுக்கவில்லை எனவும் பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதால் அதிருப்தியில் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். த.வெ.க.தலைவர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிருப்தி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதி, விஜய் இந்து விரோத தீயசக்திகள்.. ஆ.ராசா இந்து விரோத கோமாளி.. பொளந்துக்கட்டிய ஹெச்.ராஜா.!