வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அலுவலர் செல்வராஜ் வசித்து வருகிறார். அவருடன் அவரது மனைவி விஜயகுமாரி இரண்டு மகன்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு செல்வராஜ் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் விஜயகுமாரியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை அறுக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது சட்டென கண் விழித்துக் கொண்ட விஜயகுமாரி, மர்ம நபரை கண்டு கூச்சலிட்டார்.

விஜயகுமாரியின் கூச்சலைக் கேட்டு உடன் அருகே உறங்கிக் கொண்டிருந்த மகன் கணேசன் எழுந்து தனது தந்தை தான் தடுமாறி கொண்டு இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அவரை பிடித்து நாற்காலையில் அமர வைத்துள்ளார். அப்போது கணேசனை அந்த மர்ம நபர் தள்ளிவிட்டு உள்ளார். பின்னர் கணேசன் மற்றும் அவர் தாய் விஜயகுமாரி இருவரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரின் கையை வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..?

இருவரும் உடனடியாக அந்த மர்ம நபரை அறையில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டனர். மேலும் அந்த மர்ம நபர் இவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் வைத்திருந்த கத்தியால் கதவினை திறக்க முயற்சி செய்து உள்ளார். இவர்கள் கூச்சலிட்டு கத்தி உள்ளனர். அருகில் இருக்கும் உறவினர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் திருடன் புகுந்ததை தெரிவித்துள்ளனர். இதை அறிந்து கொண்ட அந்த மர்ம நபர் தப்பி சென்று உள்ளார்.

இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் இருந்த தாய் மற்றும் மகனை மீட்டு குடியாத்தம் அரசுக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று நேற்றைய முன் தினம் இரவு பள்ளிகொண்ட அடுத்த சாரதிபேட்டை கிராமத்தில் மற்றும் ராமச்சந்திரன் வீடு உள்பட ஏழு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர்.

இதில் நீலாவதி என்பவர் வீட்டில் இருந்து இரண்டு சவரன் தங்க நகையும், ராமச்சந்திரன் என்பர் வீட்டில் இருந்து ஒரு லட்சம் பணமும் கொள்ளையடிக்க பட்டுள்ளது. தொடர்ந்து குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வட மாநில இளைஞர்கள் கைவரிசையாக இருக்குமோ? என காவல்துறை வட்டாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அச்சமடைந்துள்ளனர்
இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!