நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் நான்காவது உயர்ந்துள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சக்தி புகழ்வானி நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சத்தில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விளங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

மாணவி சக்தி புகழ்வானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழக அரசை கடுமையாக சாடி உள்ளார். மாணவி சக்தி புகழ்வானி அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார் என்றும் அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்ததாகவும் சுட்டி காட்டினார்.
மே மாதம் நான்காம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நாட்கள் நெருங்க நெருங்க தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா என்ற அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருந்து சந்திப்புகள் வாணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீரழிவை சந்திக்கும் கல்வித்துறை.. அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான்.. திமுக அரசை சாடும் ராமதாஸ்..!

மார்ச் இரண்டாம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி என்ற மாணவியும் மார்ச் 28ஆம் தேதி கிழாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவியும் நேற்று முன்தினம் எடப்பாடி பெரிய முத்தியம் பட்டியை சேர்ந்த சத்யா என்ற மாணவியும் தற்போது புது பாகத்தைச் சேர்ந்த சக்தி புகழ்வாணி என்ற மாணவியும் நீட் தீர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதை தடுக்க முடியாது என்றும் கடுமையான போட்டி பெற்றோர்களின் எதிர்பார்ப்பு தாங்க முடியாத பாட சுவை ஆகியவற்றால் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அழுத்தங்களையும் மன உளைச்சலையும் சந்திப்பதை புரிந்து கொள்ள முடிவதாக கூறினார்.

தற்கொலை எதற்கு தீர்வல்ல என்றாலும், மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும் சட்டம் இயற்றும் முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில் தமிழக அரசு என்னதான் செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயன் அளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்த ராமதாஸ் நீட் தேர்வை ரத்து செய்யவும் மாணவர்கள் தற்கொலையை தடுக்கவும் தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மராத்தி மொழி பேசாவிட்டால் இனி அடிக்க மாட்டோம்… பலத்த உத்தியுடன் களமிறங்கிய சிவசேனா..!