பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டன. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பெரியார் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்றார். பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அரசியலில் தன்னை பகடைக்காயாக்க சிலர் முயற்சி மேற்கொண்டதாக திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை அப்போது தெரிவித்தார். ஆனால் தன்னை விலைபேச இதுவரை யாரும் பிறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசு திறம்பட செயலாற்றி வருவதாகவும், ஆனால் அதற்கு எதிரான செயல்களில் குறிப்பாக ஆட்சிக்கு எதிராக சதி நடைபெறுவதாகவும் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்தவர் மீது குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்
நாம் வெறுமனே கோரிக்கை வைப்பவர்களாக மட்டுமே இருந்து விடக் கூடாது என்ற கூறியு திருமாவளவன், கோட்டுபாடுகளை பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் விக்ரவாண்டி மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது முதல் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி விடும் என்று அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் திருமா அடிக்கடி இவ்வாறு பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேண்டாம் புறக்கணிப்பு.. அதிமுகவுக்கு சரிவு தொடங்கிவிடும்.. அதிமுக மீது திருமா கரிசனம்!