மத்திய அரசின் கேந்த்ரியா பள்ளிகளில் தமிழுக்கென தனியாக ஆசிரியர்கள் ஒதுக்கப்படாதது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுகுறித்து மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்துப் பேசியதாவது:
கேந்த்ரியா வித்தியாலயா பள்ளிகள் சிறப்புப் பிரிவு பள்ளிகள். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரே மாதிரியான கல்வி வழங்குவது கட்டாயமாகிறது. ஆதலால் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூட தமிழுக்கு இடமில்லை..! மொழிக் கொள்கையை தோலுரித்த திமுக எம்.பி..!
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விருப்பத்தைப் பொருத்து கேந்திரியா வித்யாலயா கல்வி விதிகளுக்கு உட்பட்ட மற்ற மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும். இதன்படி, ஒருமொழிக்கு 15 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் பகுதிநேர ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆதலால் கேந்த்ரியா வித்தியாலயா பள்ளிகளில் பகுதிநேர ஒப்பந்த அடிப்படையில் தமிழ்மொழிக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

21 கேந்த்ரியா வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விர்சுவல் அகாடெமி சார்பில் தமிழ் நாடு மாணவர்கள் விருப்பத்தையடுத்து, தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 86 இந்தி ஆசிரியர்கள், 65 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர்.
மும்மொழிக் கொள்கையில் ஏராளமான நெகிழ்வுத்தன்மை இருக்கிறது, எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. 3 மொழிகளைக் கற்பது என்பது குழந்தைகள் சார்ந்திருக்கும் மாநிலங்கள் விருப்பம், மண்டலங்கள் விருப்பம். நீண்டகாலமாக பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் இரு மொழியோடு நிற்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

எத்தனை மாணவர்கள் மும்மொழிக் கொள்கையை தேர்வு செய்து படிக்கிறார்கள், இந்தி பேசாத மாநிலங்களில் எத்தனை மாணவர்கள் மும்மொழிக் கொள்கையில் படிக்கிறார்கள் என்று எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பேசுகையில் “மொழிகளைத் தேர்வு செய்வது, மாணவர்கள் விருப்பம்தான் இரு மொழி அல்லது மும்மொழியைக் கூட தேர்வு செய்யலாம். 6ம் வகுப்பு அல்லது 7ம் வகுப்பிலிருந்து படிக்கலாம். இதனால் மேல்நிலைப் பள்ளி முடிவதற்குள் மூன்று மொழிகளில் அடிப்படைத் தேர்ச்சி பெற முடியும்” என ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!