திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜா ராம் சாமுண்டீஸ்வரி தம்பதியினர் வீட்டில் தனித்து வசித்து வந்துள்ளனர். இருவரும் இரவு வீட்டினுள் தூங்கச் சென்ற நிலையில், பிற்பகல் வரை வீட்டில் இருந்து வெளிவராமல் இருந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக.. ஜெயக்குமார் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் உயிரிழந்தது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!