முருகன் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வெளி மாநிலங்கள் மட்டும் இன்றி பழனி முருகன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில், பங்குனி மாத சிறப்பாக பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. பத்து நாட்களில் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான வைபவங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் என்னென்ன..? மக்களுக்கு நன்மையா… தீமையா..?

விழாவின் முக்கிய அம்சமாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை கல்யாண வைபவம் வருகின்ற 11ஆம் தேதியும் பங்குனி உத்திர திரு தேரோட்டம் அன்றைய தினம் மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு அனுதினமும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக இந்த திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான கட்டண தரிசனத்தை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகமும் தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கான அறிவிப்பை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆப்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...!