தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, எரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு, ஒத்தைப் புழு, செதில் பூச்சி ஆகியவை அதிக சேதாரத்தை ஏற்படுத்துபவை.
தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இயங்கி வருகின்றது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மழை அடிவார பகுதிகளான வாடிப்பட்டி, சோழவந்தான், குருவித்துறை திண்டுக்கல் மாவட்டங்களில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தென்னந்தோப்புகளே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஆற்றுப் பாசனம் அல்லது கிணற்று பாசனம் என எல்லா சூழல்களிலும் வளரக்கூடிய தென்னை மரங்களில் தற்போது பூச்சி வெட்டுகள் அதிகரித்துள்ளதாக மதுரை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென்னை ஓலைகளில் வெள்ளை நிறம் கொண்ட ஈக்கள் போன்ற பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதனால் தேங்காய்களில் பாதிப்பு ஏற்பட்டு வரத்தும் மலிவடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போலீசுக்கே பாதுகாப்பு இல்ல! எங்க இருந்து துணிச்சல் வருது? அண்ணாமலை விளாசல்
முன்னதாக இதுபோன்று பூச்சி மெட்டுகள் அதிக அளவில் பொள்ளாச்சியை கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுரையிலும் பாதிக்கப் மதுரையிலும் பாதிப்புக்குள்ளாகிய உள்ளது தென்னை விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வஉசி வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி பேராசிரியர் அப்துல் ரஷ்கம் கூறுகையில், தற்போது தென்னை மரங்கள் அதிக அளவில் ருக்கோஸ் ஸ்பைரலின் ஒயிட் ஃப்ளை என்னும் பூச்சிகளால் சென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வகையான பூச்சிகள் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு வடக்கு அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருந்த நிலையில், அதே சாயல் மற்றும் பாதிப்புடன் தமிழகம் பொள்ளாச்சி மற்றும் கேரள கோட்டையம் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

தென்னை இலைகளின் கீழ்பகுதியில் வலை படிவத்தில் தனது முட்டைகளை ஈன்றும் இந்த பூச்சிகள், இயற்கை மற்றும் செயற்கையாக செயல்படும் ஒளிச்சேர்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முட்டைகளை இலைகளுக்கு கீழ் ஈன்றும் பூச்சிகள் இலைகளுக்கு மேல் படிந்து காணப்படுவதனால் தேங்காயின் உற்பத்திகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
22 லிருந்து 25 நாட்களில் அதன் முழு பருவத்தை விட்டு இந்த வகையிலான பூச்சி வெட்டுகள் தென்னை மரங்களில் மட்டும் இன்றி வாழை, கொய்யா, மாங்காய், சப்போட்டா, பலா, பப்பாளி, வெண்டைக்காய் உள்ளிட்ட 140 செடிகள் இதன் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்பூச்சிவட்டுகளால் பெரும்பாலான தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென்னை விவசாயிகள் பாதிக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், குறிப்பாக நாட்டு காய்களை விட ஹைபிரிட் காய்கள் இந்த வகை பூச்சிவட்டுகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பூச்சிவட்டுகளால் மதுரை மட்டும் இன்றி முன்னதாக திருப்பூர், ஈரோடு, தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த வகை பூச்சி வெட்டுக்களில் இருந்து மீழுவதற்கு, ஸ்பிரே வடிவிலான மருந்துகளை இலைகளின் கீழ் அடிக்க வேண்டும் என்றும் மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓலைகளில் விளக்கெண்ணையை தெளிப்பதன் மூலம் பூச்சிகள் ஈர்க்கப்பட்டு முழு பருவ மாட்டிய பூச்சிகள் கொல்லப்படுவதற்கு உதவும் மனதருவத்துள்ளார்.

மேலும் விவசாயிகள் தென்னை மரங்கள் மட்டும் இன்றி இடையிடையே பல்வேறு பாசன முறைகளில் பயரிடுவதன் மூலமும் அறிவுறுத்தப்பட்ட உரங்களை முறையாக அளிப்பதன் மூலம் இது போன்ற பூச்சி வெட்டுகளை தவிர்க்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அரசியல் அரைவேக்காடு” திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும்... பாமக பொதுச்செயலாளர் அதிரடி...!