தாய்லாந்தில் நடக்கும் “பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முயற்சி” எனப்படும் பிம்ஸ்டெக் மாநாடு பாங்காக் நகரில் ஏப்ரல் 3 மற்றும் 4ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்தவாறு இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி 4 முதல் 6ம் தேதி வரை அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த இலங்கை, தாய்லாந்து பயணத்தின் மூலம் இந்தியா புதிதாக அறிவித்த மகாசாகர் கொள்கையின் கீழ் மண்டல கூட்டுறவு ஊக்கப்படும், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்படும்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி 3 திட்டங்களுடன் ஏப்ரல் 6-ல் தமிழகம் வருகை.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சில் முக்கிய முடிவு..!
தாய்லாந்து நாட்டுக்கு 3வதுமுறையாக செல்லும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து 3ம் தேதி தாய்லாந்து சென்று 6-வது பாங்காக் நகரில் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார். தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்தவாறே இலங்கைக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “பிரதமர் மோடி ஏப்ரல் 3 முதல் 6ம் தேதிவரை தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் செல்கிறார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் 6வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அண்டைநாடு முதல் கொள்கை, ஆக்ட் ஈஸ்ட் கொள்கை, மகாசாஹர் ஆகியவற்றில் இந்தியாவின் நிலைப்பாட்டையும், இந்திய-பசிபிக் பகுதியில் இந்தியாவின் நோக்கத்தையும் பிரதமர் மோடி எடுத்துக்கூறுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை, தாய்லாந்து, மியான்மர், நேபாளம், பூடான், வங்கதேச்தின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்று பேச உள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பு வலுப்பெற இந்தியா ஏராளமான முன்னெடுப்புகளை செய்துள்ளது, பாதுகாப்பை மேம்படுத்துதல், வர்த்தகம், முதலீடு, தகவல் தொடர்பு, உணவு, காலநிலை, பாதுகாப்பில் கூட்டறவில் இந்தியாவின் பங்கு சிறப்பானது.

பாங்காக் பயணத்தில் தாய்லாந்து பிரதமரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இரு தலைவர்களும் இருதரப்பு கூட்டுறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பார்கள் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இலங்கை பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் அனுரா குமாரா திசநாயகேவை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.
எதிர்காலத்திற்கான கூட்டுறவோடு பல்வேறு துறைகளில் செயல்படுவது, ஏற்கெனவே புரிந்துணர்வு செய்து ஒப்புக் கொள்ளப்பட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர கொழும்பு நகரில் மூத்த தலைவர்கள், மூத்த அரசியல் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
கொழும்பு நகரிலிருந்து அனுராதபுரம் செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பார்வையிடுகிறார்.
இதையும் படிங்க: பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ED முன்னாள் தலைவர் நியமனம்: காங்கிரஸுக்கு தண்ணி காட்டிய மிஸ்ரா..!