இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்புறவில் கடத்துவதற்காக மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சரக்கு வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகளை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சத்திரக்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இணங்க சரக்கு வாகனம் ஒன்று அதி வேகமாக சென்றுள்ளது.

இதனைக் கண்ட அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் சரக்கு வாகனம் அதிகாரிகள் நிறுத்துவதை அறிந்து நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தொடர்ந்து ராமநாதபுரம் அடுத்த எட்டி வயல் பகுதியில் வாகனத்தை விரட்டி மடக்கிப் பிடித்தனர். அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க வாகனத்தை ஓட்டி அவர்கள் வாகனத்தில் இருந்து தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அறிவாலயம் என்ன 'ரெட் லைட்' ஏரியாவா? - பொன்னார் உதிர்த்த ஒற்றை வார்த்தை: பொங்கி எழுந்த சேகர் பாபு..!

தொடர்ந்து ஆளில்லாத அந்த வாகனத்தை சோதனை செய்த போது, ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான இரண்டு புள்ளி எட்டு டன் சமையல் மஞ்சள் இருந்தது தெரிய வந்தது. மஞ்சள் மூட்டைகளை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த சுங்கவரி அதிகாரிகள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மஞ்சளை கடத்தியவர்கள் யார் என்றும் தப்பி சென்றவர்கள் மேலும் இதற்கு பின்னால் இருக்கக்கூடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுபவர் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!