தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன் படி கோவை மாநகர பகுதியான காந்திபுரம்,சிங்காநல்லூர்,உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு, ராமநாதபுரம், சரவணம்பட்டி,துடியலூர் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு மாதங்களாக கோவை மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இன்று மாலையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு..!

இந்த திடீர் கோடை மழை காரணமாக தற்பொழுது கோவை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் வெயிலின் கோரத்தாண்டவத்திற்கு புள்ளி வைத்த கனமழை..!