இன்று ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புது ஆண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். பொதுவாக விசேஷ நாட்களில் முக்கிய பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த புத்தாண்டுக்கு ரஜினியின் வாழ்த்து சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது.

"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்" என தான் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாட்ஷா பட வசனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு த்தாண்டு நல்வாழ்த்துகள் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக வீட்டின் முன் கூடிய ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் எல்லோருக்கும் கைகூப்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . ஆண்டின் முதல் நாளில் ரஜினியிடம் வாழ்த்துக்களை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காலையிலேயே ரசிகர்களுக்கு வந்த இன்ப செய்தி ...ரஜினி சொன்ன சூப்பர் அப்டேட்