தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் திருகோசமங்கை எனும் ஊரில் அமைந்துள்ளது மங்கலீஸ்வரி உடனுறை மங்கள நாதர் சுசாமி திருக்கோயில். இந்த சிவன் கோவில் உலகின் முதல் சிவாலயம் என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஐந்தரை அடி உயர மரகத திருமேனியோடு நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பில் காட்சியளிக்கிறார்.

ஆதிகாலத்தில் குறிப்பாக நவகிரகங்களில் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன் சந்திரன், செவ்வாய் மட்டுமே இந்த கோவிலில் கிரகங்களாக உள்ளன. இதிலிருந்தே இந்த கோவில் மிகவும் பழமையானது என்பதை நம்மால் அறிய முடிகிறது. ராவணனும் அவர் மனைவியான மண்டோதரையும் வழிபட்டு வரம்பெற்று தலமாக கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு..!

உத்திரகோசமங்கை என்று தற்போது இந்த கோவில் அறியப்பட்டாலும் முழு பெயர் திரு உத்திரகோசமங்கை என்பதுதான். திரு என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள்படுகிறது. உத்திரம் என்றால் ரகசியம் என்றும் கோசம் என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள் படுகிறது. இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் இறைவன் மங்களநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். எல்லா தலங்களிலும் இறைவனும் இறைதியும் சமீதகராக இருப்பார்கள் ஆனால் இந்த கோவிலில் இருவருக்கும் தனித்தனி சன்னதியும் தனித்தனி விமானம் ராஜகோபுரம் உள்ளன.

பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மார்ச் 31 ஆம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி கோவிலில் அபூர்வ மரகத நடராஜருக்கு சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஆறுகாலையாக சாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கணபதி உள்ளிட்ட பரிபார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் முதல் ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம் பொங்க மனம் உருகி வழிபட்டனர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு மங்கள நாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: பெண்களின் சபரிமலை... ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு..!