ராணிப்பேட்டையில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து கோவிலுக்கு சென்று இன்று நான்கு கர்நாடகா அரசு பேருந்துகளில் ஊர் திரும்பி உள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் செல்லும் போது பக்தர்கள் வந்த மூன்று பேருந்து கடந்த நிலையில் நான்காவதாக வந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த, மண் லோடு லாரியை ஓவர் டெக் செய்ய முயற்சித்துள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே காய்கறி ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது பக்தர்கள் பேருந்து மோதியுள்ளது பின்னால் வந்த மண் லாரியும் பேருந்தின் பின் பக்கம் மோதி கோர விபத்து நடந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பணமில்லா சிகிச்சை! விபத்தில் சிக்கியோருக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த நிதின் கட்கரி..
விபத்து நடந்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.இக்கோர விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான 2 மாதத்தில் இப்படியா? - தலையில் அடித்துக்கொண்டு கதறும் பெண் சப் இன்ஸ்பெக்டரின் குடும்பம்!