நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசியதும் முன்னுக்குப் பின் முரணாக தொண்டர்களை அரவணைக்காமல் போவதும், உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல் போவது இதன் காரணமாக கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர் நான், பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட 100 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது கட்சியிலிருந்து விலகும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன், 2019 ஆம் ஆண்டு அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்றவர்.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரியார் தேவைப்படுகிறார்... நறுக்கென்று பதிலளித்த ஆர். பார்த்திபன்!
2021 ஆம் ஆண்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 9656 வாக்குகளை பெற்றவர். இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ள வருகை தர உள்ள நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அழிவின் விளிம்பில் நாம் தமிழர் கட்சி:
கடந்த மாதம் முதலே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். மேலும் சிலர் அதிமுகவிலும், தவெகவிலும் ஐக்கியமாகி வருகின்றனர்.

நேற்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் கட்சியை விட்டு விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்னதாகவும் ஏராளமான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இப்படி அடுத்தடுத்து அக்கட்சியை விட்டு வெளியேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரியார் தேவைப்படுகிறார்... நறுக்கென்று பதிலளித்த ஆர். பார்த்திபன்!