கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் கர்நாடக காவலர் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள்.
கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளார். இவரை, விமான நிலையத்தில், டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியது விசாரணையில் அம்பலமானது.

இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டு வாரங்களாக தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும், துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன்..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை வாக்குமூலம்..!

துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்றும் இதற்கு முன்பு நான் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததோ வாங்கியதோ இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட உள்ள நடிகை குறித்து பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் பேசுகையில், தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை தான் சேகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: என்னை மிரட்டுறாங்க சார்... நீதிபதி முன் கதறி அழுத நடிகை.. தங்க கடத்தலில் சிக்கும் அரசியல்வாதிகள்.?