தமிழ்நாடு அரசு தனது வேளாண் பட்ஜெட்டில் மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை பெறுவதற்கான தகுதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சூரிய சக்தி பம்பு செட்:
விவசாயத்தில் சூரிய ஆற்றல் புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உழவர்களுக்கு பாசனத்திற்கான ஆற்றலை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரித்திடவும், விவசாயத்தில் மரபுசார் ஆற்றல் உபயோகத்தை குறைத்திடவும்
நீடித்த நிலையான புதிப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு வேளாண்மைகள் நீர்பாசம் செய்யும் நோக்கில் மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு தனித்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை மானியத்தில் அமைத்து தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு...!
இத்திட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உழவர்களுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர உழவர்களுக்கு 60 சதவீத மானியத்திலும், 24 கோடி ரூபாய் செலவில் அமைத்து தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மின்மோட்டார் அமைக்கவும் மானியம்:
கிணறு அமைத்து மின் வசதி பெற்ற உழவர்கள் மானியத்தில் புது திறன்மிகு மின் மோட்டார்கள், பம்பு செட்கள் வாங்கவும் திறன் குறைந்த பழைய மின் மோட்டர் பம்பு செட்டுகளை மாற்றிடவும் ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் மின் மோட்டார் பம்பு செட்டினை 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூபாய் 15,000 வரை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடிய 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
\
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்தும், பராமரித்தும் வேளாண்மை பொறயியல் துறை இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயத்திற்கு தேவைப்படும் நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மழைநீரை சேகரிக்கவும் நிலத்தின் நீர்மட்டத்தை அதிகரிக்கவும் மழைநீர் சேவரிப்பு கட்டமைப்புகளை நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் மண் புதர்களை அகற்றி தூர்வாரும் பணிகள் 500 கட்டமைப்புகளை மேற்கொள்ளுதல் 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்குதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூபாய் 2 கோடிய 75 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையை இயந்திரமயமாக்குதல்:
பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை இவரை இயந்திரமாக்குதல் வேளான் பயிர் சாகுபடியில் சில வேளான் பணிகள் மட்டும் மட்டுமே இயந்திரங்களை ஈடுபடுத்தப்படுகின்றன இதனால் சாகுபடி செலவு அதிகரிப்பதுடன் பணிகளை முடிக்க கூடுதல் காலமும் தேவைப்படுகிறது. எனவே உழவர்களின் வருமானத்தை அதிகரிக்க பயிர் சாகுபடியில் உணவு விதைப்பு, களையெடுத்தல், பயிர் பாதுகாப்பு, அறுவடை பயிர் கழிவு மேலாண்மை ஆகிய அனைத்து வேளாண் பணிகளிலும் இயந்திரமாக்குதலை கடைபிடித்தல் அவசியமாகிறது. நெல், மக்காசோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்குரிய சாகுபடிகள் இயந்திரமயமாக்குதலை கடைபிடித்திடும் பொருட்டு உழவரின் நிலங்களில் 1,550 ஏக்கர் பரப்பளவில் வேளான் தொழில்நுட்ப முனைவோர் மூலம் வேளாண்மை பொறியல் துறை வேளாண்மை உழவுநலத்துறையின் சகோதர துறைகளுடன் இணைந்து உழவர்களுக்கு செயல் விளக்கங்கள் காண்பிக்கப்படும்.

இந்த செயல் விளக்கங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள உழவர்கள் நேரில் கண்டு பயனடையும் வகையில், அக்மார் திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் இயல் விளக்கங்களை மேற்கொள்ள ரூபாய் 3 கோடிய 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நிலத்தடி நீர் கிணறு மேம்பாடு:
நீர்பாசனத்தின் முக்கிய கட்டமைப்பான திறந்தவெளி பாசன கிணறுகளில் பெரும்பாலானோர் சுற்றுசுவர் இல்லாமல் அல்லது சுற்றுசுவர் சேதமடைந்து முறையான பராமரிப்பு இல்லாமல் தூந்து போய் செயல்திறன் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திறந்த வெளி கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நிலத்தில நீர் செறிவூட்டும் அமைப்பு ஏற்படுத்தின் 50% மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூபாய் 2 கோடிய 50 லட்சம் செலவில் 100 திறந்த நிலை கிணறுகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிதூள்... வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மாஸ் திட்டம்... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு...!