திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப் புகழ்பெற்றதுமான மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் பங்குனி தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.

அதன்படி கடந்த இரண்டாம் தேதியன்று தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவில், தினசரி தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை சமேதராக, பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வரும் வைபவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: லால்குடி அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பதிருவிழாவில் முக்கியவிழாவான தெப்பத்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மகா தீபாராதனைக்குபிறகு சிவவாக்கியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க வாகனமண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வீதிகளில் வலம்வந்து பிரம்மதீர்த்த தெப்பக்குளத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

பின்னர் தெப்பம் ஐந்துமுறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும், தெப்போற்சவ வைபவத்தினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்நமச்சிவாயா என்ற பக்தி கோசத்துடன் தரிசனம்செய்தனர். தெப்பத் திருவிழாவின் நிறைவு நாளான நாளை சுவாமி தீர்த்தவாரி வைபவத்துடன் இனிதேநிறைவடைகிறது.
இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு நடைபெற்ற பாலாலயம்.. நீதிமன்ற உத்தரவையும் மீறி சலசலப்பு.. அதிரடி காட்டிய போலீசார்!