கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் கொள்கை விளக்க மாநாடு ஒன்றை நடத்தினார். வருகிற பிப்ரவரி 2-ந் தேதி கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை தவெகவில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் ஆகிய நிர்வாகிகள் மட்டுமே இருந்து வந்தனர். எனவே மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளை நிரப்பும் பணிகள் தொடங்கின. இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்கள் தவெகவில் உருவாக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த 24-ந் தேதி 19 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை தேவையில்லை.. இதைப் பண்ணாலே போதும்.. வேங்கைவயல் வழக்கில் விஜய் புது ஐடியா.!

இதன்படி அரியலூர் சிவக்குமார், ராணிப்பேட்டை கிழக்கு காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு மோகன்ராஜ், ஈரோடு கிழக்கு வெங்கடேஷ், ஈரோடு மாநகர் பாலாஜி, ஈரோடு மேற்கு பிரதீப் குமார், கடலூர் கிழக்கு ராஜ்குமார், கடலூர் தெற்கு சீனுவாசன், கடலூர் மேற்கு விஜய், கடலூர் வடக்கு ஆனந்த், கரூர் கிழக்கு பாலசுப்ரமணி, கரூர் மேற்கு மதியழகன், கள்ளக்குறிச்சி கிழக்கு பரணிபாலாஜி, கோவை தெற்கு விக்னேஷ், கோவை மாநகர் சம்பத்குமார், சேலம் மத்தி பார்த்திபன், தஞ்சை தெற்கு மதன், தஞ்சை மத்திய விஜய் சரவணன், நாமக்கல் மேற்கு சதீஷ்குமார் ஆகியோர் மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இணைச் செயலாளர்கள், 2 துணைச் செயலாளர்கள், பொருளாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு தனது முகஉருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை விஜய் வழங்கினார். மேலும் கட்சிப் பதவிகளை பெற பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்பன போன்று சமூக வலைதளங்களில் வெளிவந்த விஷயங்கள் குறித்தும் ஒவ்வொருவருரிடம் அவர் கேட்டறிந்தார். குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அறைக்கு வெளியே நிற்கச் சொல்லி புதிய நிர்வாகிகளிடம் தனித்தனியே பேசினார் விஜய்.

இந்தநிலையில், 2-வது கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகர மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகள் இன்று வெளிவரும் என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நேற்று வந்தவர் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்... முதல்வர் விஜய்யை தாக்கும் பின்னணி?