தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு, பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அமர்ந்திருக்கின்றனர். திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள 5-வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.
மக்காச்சோளம் மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருப்பதாகவும், உழவர்கள் வாழ்வில் நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் தொழில்நுட்பங்களுடன் வேளாண்மை வளர்ந்து வருகிறது என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண் துறை அமைச்சர், “2021 – 2014 வரை 346 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி. 1.87 லட்சம் பாசன மின் இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5,242 கோடி பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் மூலம் 2023 –24இல் ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அறிவித்தார்.

இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா...? காத்திருக்கும் விவசாயிகள்..!
கோடை உழவை 3 லட்சம் ஏக்கராக அதிகரிக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 46 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி விவசாயிகளுக்கான 60 – 70% மானியம் வழங்கும் திட்டத்தில் 15,800 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 95 லட்சத்து 68,000 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெற்றுள்ளது என அமைச்சர் அறிவித்தார்.
இதையும் படிங்க: Breaking News: அமிர்தசரஸில் கோயில் மீது தாக்குதல்: கையெறி குண்டு வீசி தப்பிய இருவர்