ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி உள்ளது.சமையல் எரிவாயு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது.அதன்படி இனி மின்சாரக் கட்டணம் செலுத்துவோர் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.
இதையும் படிங்க: மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு புகார்.. மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...!

தமிழகத்தில் தற்போது, முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்காக, நுகர்வோர் தங்களின் ஆதார் எண்ணை, மின் நுகர்வோர் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடந்த அக்டோபர் மாதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், மனுதாரர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு எதிராக ரவி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது என்றும் இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருக்கு எதிராக விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு.. காங்கிரஸ் எம்.பி. கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!