அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அவரது மகன் இன்பநிதியும் கண்டு களித்து வருகின்றனர். மேடையில் மகனுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அடையாள அட்டையை மகனுக்கு குத்திவிட்டது, ஜூஸ் குடிக்க வைத்தது என இன்பநிதியை அப்பா உதயநிதி பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் கலக்கி வருகிறது. இதை எல்லாம் விட அப்பா, மகனின் அல்டிமேட்டான போட்டோ ஒன்று பார்ப்பவர்கள் எல்லாம் ஷாக்காகும் அளவிற்கு வைரலாகி வருகிறது.
சிம்பிளாக வலம் வரும் இன்பநிதி:
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பொது இடங்களுக்கு வரும் போது, அப்பா உதயநிதி ஸ்டாலினைப் போலவே இன்பநிதியும் சிம்பிள் லுக்கைத் தான் பின்பற்றுகிறார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை, வேட்டி சட்டையுடன் தான் சட்டமன்றத்திற்கு வருவார்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்றி ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின், அதேவழியில் மகன் இன்பநிதியும் சிம்பிளான டீஷர்ட், ஜீன்ஸ் உடன் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: களத்தில் குதித்த இன்ப நிதி..! வாடி வாசலில் இருந்து வெளிவந்த கருணாநிதி கொள்ளு பேரன்!

திமுக சார்பில் நடத்தப்படும் சில பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது தலைக்காட்டும் இன்பநிதி, அப்பாவைப் போல வெள்ளை நிற டீஷர்ட், ஜீன்ஸ் உடன் வலம் வரும் புகைப்படங்கள் வைரலாவது உண்டு.
கால்பந்தாட்ட வீரர்:

லண்டனில் படிப்பை முடித்துள்ள இன்பநிதி ஸ்டாலின், அப்பா - அம்மாவைப் போல் திரையுலகில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்பநிதி ஸ்டாலின் தீவிர கால்பந்து விளையாட்டு வீரர். ஸ்பெயினில் Neroca FC அணியின் வீரராகவும் இன்பநிதி இருந்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் உதயநிதி பயிற்சி பெற்றார். இன்று வரை அவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கால் பந்து போட்டிகளில் டிபெண்டர் ரோலில் இன்பநிதி ஸ்டாலின் கலக்கி வருகிறார்.
சர்ச்சையில் சிக்கிய இன்பநிதி:
இன்பநிதி வெளிநாட்டில் படித்துக்கும் போது தோழி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. பெரிய இடத்து பிள்ளைகள் என்றாலே இப்படித்தான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வார்கள் என கடுமையான விமர்சனம் எழுந்தது. அப்போது இன்பநிதியின் பெற்றோர்களான உதயநிதி ஸ்டாலின், கிருத்திகாவின் அணுகுமுறை Parenting பற்றி பலருக்கும் விழிப்புணர்வு கொடுப்பதாக இருந்தது.

ஒருவரை நேசிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயப்படத் தேவையில்லை என கிருத்திகாவும், என் மகனுக்கு இப்போ 18வயசு ஆகுது. இப்போ அவன் இளைஞன், அது அவருடைய பர்சனல் வாழ்க்கை... என உதயநிதியும் கொடுத்த பதிலடியைப் பார்த்து ஒட்டுமொத்த மீடியா மட்டுமல்ல, சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்தவர்களும் அடங்கிப்போனார்கள்.
அப்பா - மகன் உறவு:
உதயநிதி ஸ்டாலின் - இன்பநிதி இடையிலான உறவு அப்பா, மகனையும் கடந்து நண்பர்கள் போல குளோஸாக உள்ளது. மகனுடன் பர்சனலான நேரத்தை செலவிடும் ஒவ்வொரு நேரத்திலுமே உதயநிதி வெளியிடும் புகைப்படங்களில் மகன் தோள் மேல் கைபோட்டப்படியே இருப்பார். அதாவது இன்பாவை மகனாக மட்டுமின்றி ஒரு தோழனாகவும் உதயநிதி நடத்துகிறார் என்பதைக் குறிக்கும். இதனால் தான் சர்ச்சையான போட்டோ விவகாரத்தில் கூட மகன் பக்கம் நின்று சரியான பதிலை உதயநிதி கொடுத்தார்.

தற்போது அப்படிப்பட்ட புகைப்படம் ஒன்று தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில், இருவரும் ஒரே மாதிரியான வெள்ளை நிற டீஷர்ட், ஜீன்ஸ் அணிந்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின், மகன் இன்பநிதியின் தோளில் ஜாலியாக கைப்போட்டு பேசிக்கொண்டு செல்கிறார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இந்த போட்டோவில் பார்க்க இருவரும் அப்பா -மகன் மாதிரி இல்ல... அண்ணன் தம்பி மாதிரி இருக்குறாங்க” என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: களத்தில் குதித்த இன்ப நிதி..! வாடி வாசலில் இருந்து வெளிவந்த கருணாநிதி கொள்ளு பேரன்!