சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டே வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் மார்ச் மாதம் தள்ளிப்போனது. அதன்படி மார்ச் 27ம் தேதி மாலையில் தான் இப்படம் வெளியானது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தில் இரண்டாம் பாகம் தான் முதலில் ரிலீசாகி இருக்கின்றது.

27ம் தேதி காலையில் ரிலீஸாக வேண்டிய படம் மாலையில் ரிலீஸானதால் முதல்நாளில் இப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இருப்பினும் முதல் நாளில் வீர தீர சூரன் 3 கோடி வரை வசூல் செய்தது. இரண்டாம் நாளும் இப்படம் மூன்று கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து மூன்றாம் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் 2 .9 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆனாலும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊர் ஊராக விக்ரம் மற்றும் படக்குழுவினர் சென்று படத்தை ப்ரொமோட் செய்தனர். அதன் காரணமாகவே மெல்ல மெல்ல இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதையும் படிங்க: கழுகு இனத்தை பாதுகாக்க சிறப்பு குழு.. நீதிமன்றம் உத்தரவு!

இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் வருகை தந்தனர்.திரையரங்கம் இருக்கும் சாலை மாநகராட்சியின் முக்கிய சாலைகளாக உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர்களை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இடையூறாக தடை செய்யப்பட்ட அதிக சத்தம் ஏற்படுத்தும் வெடிகளை பயன்படுத்தினர். அதிக சத்தம் கொண்ட வெடிகள் பயன்படுத்தியதை காவல்துறையினர் இருந்தும் கண்டு கொள்ளவில்லை.

மேலும் நடிகர் விக்ரமை பார்க்க முதல் மாடியில் கண்ணாடிகளை உடைத்து ஆபத்தான முறையில் திரையரங்குகள் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்குக்குள் வந்த விக்ரம் காரை விட்டு இறங்க விடாமல் ரசிகர்கள் கார்களுக்கு மேல் ஏறினர். இதனால் காரின் உள்ளே இருந்து விக்ரம் திரையரங்குக்குள் எவ்வாறு வர முடியும் என ரசிகர்களிடம் கோபத்துடன் பேசினார்.
அதன் பின்பு திரையரங்குளிருந்து வந்த பவுன்சர்கள் மிகவும் கஷ்டப்பட்டு விக்ரமை உள்ளே அழைத்து சென்றனர். திரையரங்கம் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் திரையரங்குக்குள் சென்று ரசிகர்களை பார்க்காமல் மீண்டும் வெளியேறினார்.

இதனிடையே விக்ரம் பார்க்க வந்த ரசிகர்களால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிக சத்தம் கொண்ட பேப்பர் வெடிகள் வெடித்ததால் ஒலி மாசு, காற்று மாசு மற்றும் சாலையில் அதிகமான குப்பைகள் ஆகியவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அதிகம் சத்தம் மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் பேப்பர் வெடிகள் பயன்படுத்துவதை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியபடி சென்றனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை உடைக்க கூலி வாங்கிக் கொண்டு சதி..! விசிக நிர்வாகிகள் மீது திருமா பரபர குற்றச்சாட்டு..!