அக்.27 மாநாட்டுக்குப் பிறகு திடீரென சைலண்ட் மோடுக்கு போன தவெக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தவெக அதிரடி அரசியலில் இறங்க போகிறது பாருங்கள். விஜய் அடுத்த ஓராண்டுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகிறார் பாருங்கள் என பெருமைப்பட்ட நிலையில் தொண்டர்கள் சோர்ந்து போகும் அளவுக்கு ஒரு பெரிய தேக்கம். அக்.27 க்கு பிறகு விஜய் பங்கேற்ற பொது நிகழ்வு டிச.6. அதன் பின்னர் ஜன 20-ல் பரந்தூர். இடைப்பட்ட காலத்தில் வந்தது வெறும் அறிக்கைகள் மட்டுமே.

இதையடுத்து பனையூர் அரசியல் என விஜய் கிண்டலடிக்கப்பட்டார். எந்த ஒரு பேட்டியும் இல்லை, பொதுமக்கள் சந்திப்பும் இல்லை. விஜய் நடிக்க சென்றார் ஆனால் மற்ற நிர்வாகிகள் கட்சி வேலையை பார்ப்பதில் சுணக்கம் இருந்தது. இந்நிலையில் தான் இரண்டு ஆடியோக்கள் வெளியானது. அது வியூக வகுப்பாளர் jஆன் ஆரோக்கியசாமி பேசுவதாக இருந்தது. கட்சி எந்த நிலையில் இருக்கிறது, புஸ்ஸி ஆனந்தை சுற்றியே இயங்குவதால் எதுவும் செய்ய முடியவில்லை என ஜான் ஆரோக்கியசாமி அதில் பேசி இருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: பரந்தூர் விசிட்... முதல் போராட்டக் களத்தில் விஜய்..
இரண்டாவது ஆடியோ புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தது. அவர் உளவுத்துறை பிடியில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார் ஜான் ஆரோக்க்கியசாமி. ஆடியோ பற்றியும் கட்சியிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஜான் ஆரோக்கியசாமியும் மறுக்கவில்லை. இந்த நிலையில்தான் கட்சியின் தேக்கத்தை போக்க விஜய், பொதுமக்கள் சந்திப்பில் இறங்க முடிவெடுத்து பரந்தூ வந்தார். போலீசார் சொன்ன இடத்தில் மக்களை சந்தித்தார். 10 நிமிடம் ஆவேச உரையாற்றினார்.

விஜய் பரந்தூர் வந்து அரங்கத்திற்குள் அமர்ந்து பொதுமக்களை பேசச்சொல்லி குறைகளை கேட்பார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேனில் இருந்தப்படியே பேசிவிட்டு கீழே இறங்கி சால்வையை வாங்கி விட்டு சென்றார். விஜய்யை சந்தித்து 900 நாள் போராட்டத்தின் வலிகளை சொல்லலாம் என வந்த பரந்தூர் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் 10 நிமிட பேச்சு முழுவதும் பரந்தூரை பற்றியும் அதன் பின்னுள்ள அரசியல் பற்றியும், நான் எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்பேன், தேவைப்பட்டால் சட்டப்போராட்டத்திலும் தவெக உங்களுடன் துணையாக நிற்கும் என்று விஜய் கூறியது அம்மக்களுக்கு ஆறுதலை அளித்தது.

விஜய் பேச்சில் இருந்த தெளிவு, அவர் பரந்தூர் விமான நிலையம் அமைவது குறித்து அரசை குற்றம் சாட்டி பேசியது அவரது எச்சரிக்கை ஆளுங்கட்சிக்கு மேலும் சிக்கலை கொடுத்தது உடனடியாக தெரிந்தது. பரந்தூர் பற்றி பேசுகிறீர்கள் மாற்று இடம் சொல்லுங்கள் என ஏதோ இவர்கள் எட்டு வழிச்சாலைக்கு போராடிய அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாற்று வழியை சொன்னதுபோல் கேள்வி எழுப்பியதில் காணமுடிந்தது. சொல்லி வைத்தார்போல் அண்ணாமலையும் அதே கேள்வியை வைத்ததிலும் தெரிந்தது.

விஜய்யின் பேச்சு அரசுக்கு நெருக்கடியை தந்தாலும், ஒரு விஷயத்தில் ஆளும் தரப்புக்கு சந்தோஷம். காரணம் விஜய் பரந்தூர் பற்றி மட்டுமே பேசினார். தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை ஒரு 20 நிமிடங்கள் கூடுதலாக பேசுவார் என எதிர்பார்த்த கட்சி தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள், குறிப்பாக உளவுத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, பொங்கல் போனஸ் தராதது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கண்முன் நிற்கும் பிரச்சனைகளை விஜய் பேசி, பேசு பொருளாக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதுபற்றியும் பேசாதது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

பெரிதாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பரந்தூர் பற்றி மட்டுமே பேசிவிட்டுச் சென்றது ஒருவகையில் அரசுக்கு நிம்மதி என்றே சொல்லலாம். ஆனால் அவர் பேசாமல் விட்டதால் தவெக தொண்டர்களுக்கு ஏமாற்றமே.
இதையும் படிங்க: களத்தில் விஜய்... கலக்கத்தில் ஸ்டாலின்... ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் தவெகவினர்...