15 லட்சம் ஆண்டுகள் மனித குல வரலாற்று தொன்மையை கொண்ட நிலப்பரப்பு தமிழ்நாடு. தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு அடிப்படையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புகள் உலகிற்கு பறைசாற்றப்பட்டு வருகிறது. கீழடி அகழாய்வு தொல்லியலாளர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் இடையே மாபெரும் தாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சமூகம் கிமு ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிம பகுப்பாய்வுகள் முடிவு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பட்ட நெல் உமையனை வகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைக்கப்பட்ட ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி காலக் கணிப்பு முடிவுகள் வாயிலாக 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளது. தமிழ் சமூகத்தின் பழமையான மேலும் பறைசாற்றும் வகையிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காகவும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசை... இளையராஜா பெருமிதம்..!

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டது. கண்ணுக்கு மை தீட்டும் கருவி அஞ்சனக்கோல் எனப்படுகிறது. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலியவைகளால் செய்த ஓரு நீளமான தடித்த கம்பியைப் போன்ற ஆயுதம். இது கூர்மை மழுங்கியதாகவும் இரு முனைகளுடையதாகவும் செய்யப்பட்டிருக்கும்.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில், 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கிடைக்கப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறை, அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதை இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைச்சாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..!