நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தலைநகரா டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
கருத்துக்கணிப்பின்படியே 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா அல்லது கருத்துக்கணிப்புகளை தகர்த்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து கெஜ்ரிவால் முதல் அமைச்சர் ஆவாரா என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அதற்கு ஏற்பவே தொடக்கத்தில் இருந்து பாஜக முன்னணி வகித்தாலும் இந்த இரு கட்சிகளும் மிக நெருக்கமான வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தன. இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலமைச்சர் யார் என்பது குறித்த யூகங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...!

இந்த செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது பாஜக கட்சி 43 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகித்தன. 9:00 மணி அளவில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நொண்டி அடித்தபடி முன்னிலை வகிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிடும்.
அப்படி பாஜக ஆட்சி அமைப்பதாக இருந்தால் முதல்வர் யாராக இருப்பார் என்பது பற்றி அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த முதல்வர் போட்டி முன்னுரிமை பட்டியலில் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. துஷ்யந்த் கௌதம்: தற்போது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள கௌதம், தலித் தலைவராகவும் இருக்கிறார்.
டெல்லியில் அடித்தள ஆதரவுடன் கூடிய முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
தற்போதைய தேர்தலில் அவர் கரோல் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் தற்போதைய எம்எல்ஏ விக்னேஷ் ரவியை எதிர்த்து களம் காணுகிறார்.

2. பர்வேஷ் வர்மா: டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் சாகித் சிங் வருமாவின் மகனான பர்வேஸ் வர்மா ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் முன்னணி வேட்பாளர்களில் இவர் முக்கியமானவர்.
3.ரமேஷ் பிதுரி: மற்றொரு முக்கிய வேட்பாளர் தற்போதைய டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து களம் காணும் ரமேஷ் பிதுரி.

4. இவர்களைத் தவிர டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா (மோதி நகர் வேட்பாளர்).
5. பெண் முதலமைச்சர் ஒருவரை தேர்வு செய்வதாக இருந்தால் ரேகா குப்தா அல்லது ஷிகா ராய் ஆகியோரின் பெயர்களும்அடிபடுகின்றன.
இதையும் படிங்க: ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!