ஜி.பி.எஸ் தொற்றால் ஆந்திர மாநிலத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொமரோலு மண்டலத்தில் உள்ள அலசந்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கமலம்மா. இவருக்கு கடந்த 2ம் தேதி நாட்களுக்கு முன்பு, கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் அவரை குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமலாம்மாவுக்கு ஜி.பி.எஸ்.நோயின் அறிகுறிகள் தென்பட்டதால் இந்த மாதம் 3ம் தேதி அவரை குண்டூர் டாக்டகள் பரிசோதனைகளை மேற்கொண்டு அவருக்கு ஜி.பி.எஸ். வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!
அதன் பிறகு அவரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நோயின் தீவிரம் அதிகரித்ததால் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கமலம்மா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும், இந்த நோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆந்திராவில் முதல் ஜி.பி.எஸ்.தொற்றால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!