மகளிர் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை சிறைகளை நவீனப்படுத்துதல், குறிப்பிட்ட கணக்கெடுப்பு உள்ளிட்ட எதுக்கும் உள்துறை அமைச்சகம் பயன்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் திறனாய்வு குறித்த கூட்டம் நடந்த போது இவை ஆய்வு செய்யப்பட்டன. பாஜக எம்.பி.ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை ஆய்வு செய்தது.

அப்போது திரிணமூல காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூட்டத்தில் பேசுகையில் “ மகளிர் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை சரியாக உள்துறை அமைச்சகம் பயன்படுத்தவில்லை, மூன்றில் 2 பங்கு நிதி பயன்படுத்தப்படவே இல்லை. பாதுகாப்பான நகரை உருவாக்கத்தான் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது, ஆனால், உள்துறை அமைச்சகம் என்ன செய்தது. பெண்கள் இருக்கும் சிறைகளை நவீனப்படுத்த 2024-25ம் ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது, இதில் ரூ.75 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது” எனபேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்.! நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்த திமுக

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பேசுகையில் “ கடந்த பட்ஜெட்டை விட இந்த முறை எல்லைப்பகுதி கட்டுமானத்துக்கும், மேலாண்மைக்கும் நிதி 80% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.3,756.51 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.1840.74 கோடி அதிகரித்து, ரூ. ரூ.5597.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து மத்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்யப் போகிறது, திட்டங்கள் என்ன வைத்திருக்கிறது என்பதற்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை. எங்களைப் போன்ற வங்கதேச ஒட்டியிருக்கும் மாநிலங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில் “ 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், ஒதுக்கீடு குறித்தும் எந்த தகவலும் இல்லை. 2021ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும், இன்னும் தொடங்கவில்லை. இந்த பட்ஜெட்டைப் பார்த்தபோது, மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராகவில்லை எனத் தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தாததால் எல்லை நிர்ணயம் தாமதமாகிறது, எனவே அரசாங்கம் ஆடம்பரமாகவும், காட்சியாகவும் நிறைவேற்றிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. அஜெய் மகான் பேசுகையில் “ மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. டெல்லி போலீஸார் பதிவேட்டிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என கவலை தெரிவித்தார். பாஜக எம்.பி. ஒருவர் பேசுகையில் “ விவசாயிகள் போராட்டம் நடத்தும் சிங்கு எல்லையில் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு கை விலங்கு..,! உடனடி விவாதம் வேண்டும்.. எதிர்க்கட்சிகள் போர்க்கொடி