சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பாக ஆளுங்கட்சி அமைச்சர்களாக இருக்கிறவர்கள் இந்தியை திணிக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி என்கின்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து வைக்கிறார்கள். இன்னைக்கு தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் அரசு பள்ளியை விட அதிகமாக இருக்கிறார்கள். அவங்களுடைய கல்விக் குறிப்பு ஒரு ஆண்டுக்கு முன்னாடி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியிலும் 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியிலும் படிக்கிறாங்க. அப்படின்னா, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம். குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தால் இந்தி படிக்கிறாங்க என்ற தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கிடையாது. தமிழக மெட்ரிகுலேஷனை பொறுத்தவரைக்கும் ஆப்ஷனல் லாங்குவேஜ் என்னென்ன இருக்குன்னு பார்த்தீங்கன்னா, தெலுங்கு, அரபிக், உருது, மலையாளம் , கன்னடம், இந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய பொழிகள் இருக்கிறது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள 56 லட்சம் மாணவர்கள் வேறு ஒரு வழியிலும், 52 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் வேறு வழியிலும் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளைத் தான் படிக்கணும் என கட்டாயப்படுத்துகிறோம். இதனால் ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: இரு மொழி கொள்கை பேசும் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பீர்களா? எச்.ராஜா கிடுக்கி பிடி

தமிழ்நாட்டுல பிரைவேட் ஸ்கூல் மார்க்கெட் 30000 கோடி ரூபாய். எல்லாருமே தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு பள்ளியில இருமொழிக் கொள்கையை வச்சிருக்காங்களா? என்பது தான் என் முதல் கேள்வி என்றார். இங்க எத்தனை பேருக்கு தெரியும் அண்ணன் விஜய் அவர்கள் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது. தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துறாங்க. பதூர்ல அந்த பள்ளியினுடைய பெயர் விஜய் வித்யாசிரம் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் விஜய் வித்யாசிரம் என்கின்ற பள்ளி நடத்துறாங்க. அந்த டாக்குமெண்ட்டை பாருங்க, அதை ஜூம் செய்து பார்த்தால் சி ஜோசப் விஜய் என்ற பெயர் தான் உரிமையாளராக உள்ளது.

2017 லிருந்து 2052 வரை ஜோசப் விஜய் அவருடைய இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு 35 ஆண்டு லீஸ் கொடுக்கிறார். அந்த அறக்கட்டளை யாருடைய பெயர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்குன்னா எஸ்.ஏ.சந்திரசேகரன் உடைய பெயரில் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. விஜய் உடைய தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தும் பள்ளியின் பெயர் தான் “விஜய் வித்யாசிரம்”. அந்த பள்ளியில் இந்தி இருக்கு, விஜய் உடைய பசங்க பிரெஞ்ச் படிக்கிறாங்க. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடைய குழந்தைகள் பிரெஞ்ச் படிக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் எந்த லட்சணத்தில் வெளியே வந்து அரசு பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்கள் மட்டும் இரண்டு மொழி படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியலுக்காக இந்தி எதிர்ப்பு... ஆதாயத்துக்காக சிபிஎஸ்இ பள்ளிகளா.? திமுகவை உலுக்கும் ஹெச். ராஜா.!