நீட் தேர்வில் இந்த முறை எந்த முறைகேடும் நடக்காது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு மாணவ செல்வங்கள் தைரியமாக தேர்வு எழுதி தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்தடைந்தார். அங்கே செய்தியாளர்களை சந்தித்தபோது முன்மொழி கொள்கை குறித்து கேட்டதற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு கனிமொழி அக்காவிற்கு ஏன் இந்த அக்கரை என கேள்வி எழுப்பினார். ஜாதிய மோதல்கள் இரும்புகரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
திமுகவின் மாயாவி இரும்பு கரத்தை பார்க்க வேண்டும். பித்தளையா, இரும்பா? என்பதை பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை அது களிமண். இரும்பு கரம் என்று பொய் சொல்கிறார் என கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர திட்டினா கூட அவரோட கெத்து வேற லெவல்..? சீமானை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த அண்ணாமலை..!

பள்ளியில் கற்றல் திறன் குறைவதால் சாதிய மோதல் அதிகரிக்கிறது தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுக்காததால் ஆசிரியர்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை. தமிழகத்தில் ஆசிரியரின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளது . காவல்துறையினரின் கைகளை எப்படி கட்டி போட்டு உள்ளார்களோ அதே போல் பள்ளி ஆசிரியர்களின் கைகளும் கட்டி போடப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறினார்.
நான் முதல்வனில் திராவிட சித்தாந்தம் பேசுகின்றனர் இதைப் பேசிக் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு எப்படி கற்றல் திறன் வரும் எனக்கு கூறினார்.கச்சதீவில் திரும்பி கொண்டு வர வேண்டும் என்பது தமிழக பாஜகவின் தீவிர கோட்பாடு அதை உடனடியாக கொண்டு வந்து விட முடியாது 72, 73 ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்டது அதை உடனே எடுக்க முடியாது பிரதமர் மோடி இலங்கை செல்வதாக சமீபத்தில் செய்தித்தாள்களில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது இலங்கை பிரதமருடன் சுமுகமாக பேசி நல்ல முறையில் கச்சத்தீவை கைப்பற்றுவதுதான் பாஜகவின் குறிக்கோள் என அண்ணாமலை கூறினார்.

கடந்த முறை நீட் தேர்வில் ஒரு சில குளறுபடிகள் நடந்தது அந்த குளறுபடியில் ஈடுபட்ட அதிகாரிகள் அகற்றப்பட்டு இருக்கிறார்கள் இந்த முறை நீட் தேர்வில் இந்த முறை எந்த முறைகேடும் நடக்காது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு மாணவ செல்வங்கள் தைரியமாக தேர்வு எழுதி தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கலாம் என கூறினார்.
முதல்வர் நமது கூட்டணி ஸ்ட்ராங்காக உள்ளது என்று கனவில் இருக்கிறார். முதல்வர் அவர் மீதான நம்பிக்கையில் இல்லை கூட்டணி நம்பிக்கையில் இருக்கிறார். வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மக்கள் பெரிய கூட்டணி சின்ன கூட்டணி என்று பார்க்க மாட்டார்கள் அதை தமிழக முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: FIGHT பண்ணிட்டே இருங்க அண்ணா! STRONG- ஆ இருங்க..! சீமானுக்கு ஊக்கம் தந்த அண்ணாமலை..!