நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு வரையறை குறித்து திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 45 கட்சி தலைவர்களையும் பாஜக தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களையும் நேரடியாக சந்திக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் வந்த 45 கட்சிகளுக்கும் ஒரு கடிதம் எழுத போகிறோம். எங்களுடைய தலைவர்கள் 45 கட்சியின் தலைவர்களையும் போய் சந்திப்பார்கள். தமிழகத்தின் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் 45 கட்சி தலைவர்களையும் போய் சந்திப்பார்கள்.

அவர்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்து ஒரு தவறான புரிதல் இருக்கிறது, ஐயம் இருக்கிறது, அச்சம் இருக்கிறது என்று தெரிவித்தால் அதற்கு விளக்கமளிப்பது எங்கள் கடமை. முதலமைச்சர் யார், யார்.. எந்த கட்சிகளை அழைத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் போய் நாங்கள் விவரிக்க தயாராக இருக்கிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் 45 கட்சிகளுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதுகிறோம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடகமாடுவது பாஜக-வா..? திமுக-வா..? அதிகாலையில் பரபரக்க வைத்த விஜயின் கடிதம்..!
ஒவ்வொரு கட்சிக்கும், பாஜகவை சேர்ந்த ஒவ்வொரு தலைவர்களும் செல்வார்கள். சின்ன கட்சி, பெரிய கட்சி என்று பேதம் இல்லை. எல்லா கட்சி தலைவரிடம் நாங்கள் செல்கிறோம். இதில், அந்த கட்சிகளுக்கு சந்தேகம் வருகிறதா? என்பதை கேட்டு விளக்க உள்ளோம். மீடியா முன்பு பேசுவது வேறு... அறைக்குள் பேசுவது வேறு. அந்நியோன்யமாக, சகோதர- சகோதரிகளாக பேசுவது வேறு. அதற்கும் பாரதிய ஜனதா ஜனதா கட்சி தயாராக இருக்கிறோம். பொன்னாராக இருக்கட்டு, தமிழிசை அக்கா, எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்களே நேரடியாக செல்வார்கள்.

45 கட்சி தலைவர்களை சந்திப்பதற்கு எங்களுடைய தலைவர்கள் அவர்களிடத்தில் சென்று அதை விளக்குவதை எங்கள் கடமையாக நாங்கள் பார்க்கிறோம். பாஜகவின் எல்லா தலைவர்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். திராவிடர் கழகமாக இருந்தாலும், நாங்கள் சென்று திராவிடர் கழகத் தலைவரை சந்தித்து அவர்களுக்கு இருக்க கூடிய அச்சத்தை தெளிவுபடுத்தி விட்டு வெளியே வருவதற்கு நாங்கள் தயாராகிறோம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, ''மறைமுகமாக நாங்கள் கூட்டணி குறித்து யாரிடம் பேசவில்லை. பாஜக வெளிப்படையாக இருக்கக் கூடிய கட்சி. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் வலிமையான கூட்டணியாக இருக்கும். அண்ணன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓட்டுக்களை சிந்தாமல், சிதறாமல் என்கிற கருத்தை வைத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய வாதம்.

அது சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைக்க கூடிய வேலை இருக்கிறது என்று சொன்னார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. கட்சியின் அடிப்படை வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலே வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நேரமும், காலமும் வரும்போது தெரியும். தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி எப்படி இருக்கும். இதில் எப்படிப்பட்ட தலைவர்கள் இருப்பார்கள், எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் அதற்கான நேரம் வரும் போது இதைப் பற்றி பேசலாம்'' எனத் தெரிவித்தார்.