சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ். இவரது குடியிருப்பு அருகே வசித்து வந்த குணா என்பவர் இரு தினங்களுக்கு முன்பு இறந்தார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்கு பொழுது நடனம் ஆடுவதில் அதே பகுதியை சேர்ந்த யுவராஜின் நண்பர்களன, பிரகாஷ், கிரி வினோத் ஆகியோருக்கு, 17 வயது சிறுவனோடு தகராறு ஏற்பட்டுள்ளது. 4 பேரும் சேர்ந்து 17 வயது சிறுவனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சிறுவனின் நெற்றியில் ரத்தக்காயமும், உதட்டில் அடிபட்டு, உதடு கிழிய கூடிய அளவிற்கு காயமும் ஏற்பட்டுள்ளது

உடலில் காயங்களுடன் சிறுவன் வீட்டிற்கு சென்ற நிலையில், மகனின் நிலையை பார்த்து அவனது தாய் பதறிபோனார். சிறுவனிடம் விசாரித்ததில் யுவராஜ் மற்றும் அவனது நண்பர்கள் தாக்கியதான சிறுவன் தெரிவித்துள்ளான். இதை அடுத்து 17 வயது சிறுவனின் தாய் ஆர்கே நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். தாய் அளித்த புகாரின் பேரில் சார் வழக்கு பதிவு செய்த ஆர்.கே. நகர் போலீசார், யுவராஜ் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது ஏற்கனவே அதிக குடிபோதையில் இருந்த யுவராஜ், போலீசாரின் முன்பே மீண்டும் ஒரு குவாட்டர் மது பாட்டிலை எடுத்து, அதை திறந்து மடக்கு, மடக்கு என குடித்துள்ளான்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார்...!

பின்னர், அந்த பாட்டிலை சுவற்றில் உடைத்துவிட்ட், உடைந்த கண்ணாடி பாட்டிலால் தனது கழுத்து, கை என உடலில் கீறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் யுவராஜ். அவரை ஒரு வழியாக ஆர்கே நகர் போலீசார் பேசி சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் உள்ளே இருக்கக்கூடிய சிறைக்கூடத்தில் அடைத்துள்ளனர். அப்போதும் போதையில் அடங்காத யுவராஜ் இரும்பு கம்பி பிடித்துக் கொண்டு தன் தலையை பலமாக தாக்கி கொண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து யுவராஜின் போதை தெளியும் வரை அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட போலீசார், போதை தெளிந்ததும் அவனது கூட்டாளியான கிரி, பிரகாஷ், வினோத் என மொத்தம் நான்கு பேரையும் கைது செய்த நீதிமன்ற ஆஜருக்கு பின் சிறையில் அடைத்தனர். கைது செய்யச் சென்ற காவலர்கள் முன்னிலையிலே மது குடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த பாட்டிலை உடைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: வழிப்பறி வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்.. ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு...!