டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா (வயது 29). இவருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ள கௌரவ் கௌசிக் என்பவருக்கும் கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு வயது மகன் உள்ளான். அன்விதா சர்மாவிடம் அதிக வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
கணவர் கௌசிக், மனைவிக்கு உறுதுணையாக இல்லாமல் தொடர்ந்து மட்டம் தட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அன்விதா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தனது வீட்டில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

உயிர் பிரியும் முன், தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் அன்விதா நீண்ட வாட்சப் குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில் தனது கணவன், மாமியார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். எனது கணவர் என்னை அல்ல, என் வேலையை தான் திருமணம் செய்துள்ளார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் அவருக்கு போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை தான் விரும்பினர். ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள்.
இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம்.. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என முழக்கம்..!

கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் என்னை மட்டம் தட்டியது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது. நான் செய்த எல்லாவற்றிலும் அவர் குற்றம் குறை கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் வேலைக்கார பெண்ணாக மட்டுமே இருக்க விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன். அவமானங்களை இனியும் தாங்க முடியாது.
என் கணவரால் எனது பேங்க் அக்கவுண்ட், பாஸ் புக் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை என அன்விதா தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கௌஷிக் மற்றும் அவர்களது மகன் வெளியே சென்றிருந்தபோது அன்விஷா உயிரை மாய்த்தார். அன்விதாவின் மெசேஜை பார்த்தவுடன், அவரது குடும்பத்தினர் உடனடியாக அன்விதாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களின் அழைப்புகளுக்கு அன்விஷா பதிலளிக்க வில்லை. அவர்கள் கௌஷிக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவரும் வேகமாக வீடு திரும்பினார். ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் கிரில்லை வெட்டி வீட்டினுள் சென்று பார்த்தபோது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

இந்நிலையில் மகளின் இறப்பு தொடர்பாக அவி அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு, அன்விதாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினர். அவளுடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே பெற்றுக்கொண்டனர்.

மார்ச் 16ம் தேதி அவர்கள் என் மகளை கடுமையான உடல் மற்றும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர். இதனால் அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி, துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை அடுத்து அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களை ஏமாற்றிய FIITJEE மீது வழக்குப்பதிவு.. டெல்லி போலீஸ் அதிரடி..!