நெல்லையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ப்காட்டில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள டாடா சோலார் பணியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து விக்ரம் சோலார் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியும், 1600 கோடியில் பல்வேறு நல திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தார். அதனைத் தொடர்ந்து சாலையில் நடந்து சென்று மக்களை நேரில் சந்திப்பது, குழந்தைகளை கொஞ்சி மகிழ்வது, இளம் தலைமுறையினருடன் செஃல்பி எடுத்துக் கொள்வது என மக்களோடு மக்களாக நேற்றும், இன்றும் வலம் வருகிறார்.

இதனிடையே, நெல்லைக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை சந்திப்பதாக கூறியதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசினர் சுற்றுலா மாளிகை முன்பு காத்திருந்தனர்.
இதையும் படிங்க: ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...!
ஆனால் முறையாக அழைப்பு வராததால் காத்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பத்து பேரை முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்றனர். ஆனால் உள்ளே சென்றவர்களை முதல்வரை சந்திக்க விடவில்லை.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளும் வழங்குவதற்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது சுற்றுலா மாளிகை முன்பு இருந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களிடம் காரில் இருந்தபடி மனுவை மட்டும் வாங்கி சென்றுள்ளார். இதனால் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைத்தனர்.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருட்டுக்கடைக்குச் சென்று அல்வா சாப்பிட நேரமிருக்கிறது... 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லையா?” விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதல்வர் ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.!@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/SAolJCeaSS
— Puthiya Tamilagam (@PTpartyOfficial) February 7, 2025
இதையும் படிங்க: முதல் ஆளாக அரிட்டாபட்டி விரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாளை பயணம்!