திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, "திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்" என்று பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், இது தொடர்பாக செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அன்று அயோத்தி, இன்று திருப்பரங்குன்றம். அயோத்தியில் கலவரத்தைக் முடித்தவர்கள், அயோத்தி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள் இன்று திருப்பரங்குன்றத்தில் தொடங்க முயற்சிக்கின்றனர்.

பாஜகவின் சதியை தமிழ்நாடு மக்களுடன் இணைந்து காங்கிரஸ் பேரியக்கம் முறியடிக்கும். மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாளை (06.02.2025) திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வோம்” என அந்தப் பதிவில் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ”மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்காக ஒரு கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது. இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!

காங்கிரஸ் சார்பாக எங்கள் கட்சியினரோடு திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம்.ம த நல்லிணகத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம். தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பாஜகவின் துணையோடு தமிழகத்தைக் கலவர பூமியாக்க நினைக்கிறார்கள். அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள் தற்போது திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இவர்களது மத அரசியல் கொஞ்சம், கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது” என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஆப்பு..? அதிர வைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்.!